‘கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி’ – இஸ்ரோ தலைவர் நாராயணன்
1 min read
“India has mastered cryogenic engine technology” – ISRO Chairman Narayanan
27/6/2026
மூன்று கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளை உருவாக்கி, நமக்கு மறுக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் நாம் தேர்ச்சி பெற்று, அதில் தலைமைத்துவம் பெற்றுள்ளோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
விமானப்படை சங்கத்தின் கர்நாடக கிளை சார்பில், பெங்களூருவில் உள்ள HAL மேலாண்மை அகாடமியில் நடைபெற்ற 17-வது ஏர் சீப் மார்ஷல் எல்.எம்.கத்ரே நினைவு தின நிகழ்வில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
விமானப்படை சங்கத்தின் கர்நாடக கிளை சார்பில், பெங்களூருவில் உள்ள HAL மேலாண்மை அகாடமியில் நடைபெற்ற 17-வது ஏர் சீப் மார்ஷல் எல்.எம்.கத்ரே நினைவு தின நிகழ்வில் இஸ்ரோ தலைவர் நாராயாணன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
“இந்தியாவுக்கு மறுக்கப்பட்ட தொழில்நுட்பமான கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜினை நாம் தற்போது உருவாக்கியுள்ளோம். மூன்று கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளை உருவாக்கி, அதன் மூலம் பல உலக சாதனைகளை படைத்ததன் மூலம், நமக்கு மறுக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் நாம் தேர்ச்சி பெற்று, அதில் தலைமைத்துவம் பெற்றுள்ளோம்.
1963-ல் 7 கிலோ எடை கொண்ட ஒரு ஒலி ஏவுகணையை ஏவியதில் இருந்து, உலகின் மிகவும் மேம்பட்ட ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களை உருவாக்கும் அளவிற்கு இந்தியா இன்று பரிணமித்துள்ளது.
நமக்கு கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை வழங்க மறுத்த நாடுகளுக்கு இன்று நான் நன்றி கூறுகிறேன். இன்று நாம் 3 கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளை உருவாக்கியுள்ளோம்.
200 டன் செமி-கிரையோஜெனிக் இன்ஜினின் மேம்பாட்டுப் பணியில், உந்துவிசை அளவை கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நாம் படிப்படியாக முன்னேறி வருவதால், இது ஒரு பெரிய மைல்கல்லாக உள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் இந்தியாவின் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு, ஆளில்லா ‘ககன்யான்’ பயண திட்டத்திற்கு தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் முதல் ஆளில்லா விண்வெளி பயண திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். அதன் முடிவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு, ஆட்கள் பயணிக்கும் திட்டத்திற்குத் திரும்புவோம்.
நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கும் எடுத்து வரும் முதல் இந்திய திட்டமாக ‘சந்திரயான் 4’ இருக்கும். அதே சமயம், ஜப்பானுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள ‘சந்திரயான்-5’ திட்டத்தில், சுமார் 100 நாட்கள் செயல்படக்கூடிய 350 கிலோ எடை கொண்ட ரோவர் பயன்படுத்தப்பட உள்ளது. இது, ‘சந்திரயான்-3’ திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 14 நாள் செயல்பாட்டுக் காலத்துடன் கூடிய 25 கிலோ ரோவரை ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
இந்தியா 2035-ம் ஆண்டுக்குள் தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கும், 2040-ம் ஆண்டுக்குள் ஒரு இந்தியரை நிலவுக்கு அனுப்புவதற்கும் திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருகிறது. 2040-ம் ஆண்டில், நமது தேசிய கொடியுடன் கூடிய இந்திய ஏவுகணையைப் பயன்படுத்தி இந்தியா நிலவில் தரையிறங்கும். GeographicReference
இஸ்ரோ 105-க்கும் மேற்பட்ட ஏவுகணை திட்டங்களையும், 135 செயற்கைக்கோள் திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதுடன், 34 நாடுகளை சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இதற்கு சுமார் 450 தொழில்துறைகள், 400-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சுமார் 130 கல்வி நிறுவனங்கள் உறுதுணையாக இருந்துள்ளன.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.