June 28, 2026

Seithi Saral

Tamil News Channel

விநாயகர் சிலை; பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

1 min read


Vinayagar Idol: PM Modi’s appeal to the public

28.6.2026
மக்களுக்கு பெருமிதம் அளிக்கும் சாதனைகளை இந்தியா தொடர்ந்து படைத்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 2026 ஆம் ஆண்டின் பாதி காலம் முடிவுக்கு வருகிறது. இந்த ஆறு மாதங்களில், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நமது நாட்டு மக்களின் எண்ணற்ற சாதனைகள் குறித்து நாம் பேசினோம். ஜூன் மாதத்திலும், மக்களை பெருமிதம் கொள்ளச் செய்யும் சில சாதனைகளை நாடு அடைந்துள்ளது. கொல்கட்டாவில் ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரே ஆகிய மூன்று போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.
இந்தியா பல சாதனைகளை கண்டுள்ளது. ஜூன் மாதத்தில் விமானத்துறையிலும் நம் நாடு பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சி-295 விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதனால் ‘சுயசார்பு இந்தியா’ உருவாக்குவதற்கான உறுதிப்பாடு வலுவடைந்துள்ளது.

ஆண்டுக்கு வெறும் ரூ.20 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் பாதுகாப்பு அளிக்கும் பிஎம் விபத்துக் காப்பீட்டுத்திட்டமும், ரூ.436 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் உத்தரவாதம் அளிக்கும் பிஎம் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத்திட்டமும் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் மிகப்பெரிய பாதுகாப்புக் கவசம்.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் போன்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்களுக்கு சில விஷயங்களில் வேண்டுகோள் விடுத்து இருந்தேன். சிறிது காலத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மக்கள் தனது வேண்டுகோளுக்கு ஆதரவளித்தது மட்டுமல்லாமல், பல்வேறு வழிகளிலும் தீவிரமாக ஒத்துழைத்துள்ளனர்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் நன்றி கூறுகிறேன். அவர்கள் எனது வேண்டுகோளுக்கு ஆதரவளித்தது மட்டுமல்லாமல், எல்லா வகையிலும் தீவிரமாக ஒத்துழைத்து வருகின்றனர். பல குடும்பங்கள் தங்களது அனுபவங்களை குறுஞ்செய்திகள் மூலம் என்னுடன் பகிர்ந்துள்ளனர். விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து வழிபாடு செய்பவர்கள், நமது மண்ணின் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட சிலைகளை வாங்கி வழிபட வேண்டும்.
சிலை செய்வோரும், களி மண்ணில் மட்டுமே செய்ய வேண்டும். சிலை வாங்குவோர்,அவை எந்த பொருளால் செய்யப்பட்டவை, எந்த நாட்டில் செய்யப்பட்டவை என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸில் செய்த சிலைகளை ஒருபோதும் வாங்கக்கூடாது. மழைநீரின் ஒவ்வொரு துளியையும் நாம் சேமிக்க வேண்டும். மழைநீரின் ஒவ்வொரு துளியையும் சேமிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *