June 30, 2026

Seithi Saral

Tamil News Channel

ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு

1 min read

Dheeraj Seth takes charge as the new Army Chief

30.6.2026
நாட்டின் 31-வது ராணுவ தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் தற்போது பொறுப்பேற்று உள்ளார்.

நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பணிக்காலம் இன்றுடன் நிறைவுபெற்றது. இதனை தொடர்ந்து உபேந்திர திரிவேதி பணி ஓய்வு பெற்றார். டெல்லியில் அவருக்கு புரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நாட்டின் 31-வது ராணுவ தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் தற்போது பொறுப்பேற்றுக்கொண்டார். டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 1986-ல் ராணுவதில் சேர்ந்த தீரஜ் சேத், ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்பு படை, பாலைவனப் பகுதிகளில் கவசப் படைப்பிரிவு என ஏறக்குறைய 40 ஆண்டுகள் பல்வேறு கடினமான சூழல்களில் பணியாற்றிய மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர் ஆவார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *