July 2, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் மின் மயானம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

1 min read

Public oppose construction of electric crematorium in Aykudi Town Panchayat area.

30.6.2026
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில்
மின்மயானம் கட்டுவதற்கு எதிர்ப்பு- பேரூராட்சி கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் செயல்அலுவலர் இல்லாததால் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் சுமார் 15000 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சக்தி நகர் பகுதியில் மின்மயானம் கட்டுவதற்காக சுமார் ஒருகோடி ஆறுபது லட்சம் (1.60) ரூபாய் ஒதிக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டிய நிலையில் அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த பகுதியில் மின்மயானம் கட்டினால் இந்த பகுதியில் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகக்கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து நடைபெற்ற பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் மனுகொடுக்கச்சென்ற நிலையில் இன்று செயல் அலுவலர் கூட்டத்திற்கு வரததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு காணப்பட்டு வந்ததை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்க்குடி போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை தற்காலிமாக கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *