பரமக்குடி: ரூ 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார்: வி.ஏ.ஒ தலைமறைவு
1 min read
Paramakudi: VAO absconding following complaint of accepting Rs3,000 bribe
30/6/2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் முதலூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் (வயது 37). இவர் முடிக்கப்பட்ட பட்டா மாறுதலுக்கு வெகுமதியாக, கிராம நிர்வாக அலுவலர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டு, பின்னர் ரூ.3 ஆயிரமாக குறைத்து கேட்டதாக புகார்தாரர் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கையின் போது, குற்றம் சாட்டப்பட்ட அலுவலரின் தொலைபேசியில் கூறியபடி, சத்திரக்குடியில் அமைந்துள்ள இ-சேவை மைய ஊழியரிடம் ஒப்படைக்கப்பட்ட லஞ்சப் பணம் ரூ.3 ஆயிரத்தை கைப்பற்றப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறையினரின் நடவடிக்கையின் போது குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் சம்பவ இடத்தில் இல்லை. இதனிடையே தலைமறைவாக உள்ள கிராம நிர்வாக அலுவலரை பிடிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.