மஞ்சள் குளவி கடித்து பூச்சியியல் பேராசிரியர் பலி: 18 மாணவர்கள் காயம்
1 min read
Entomology professor dies after yellow wasp sting; 18 students injured.
1.7.2026
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பாபுகுளத்தில் தேனீக்கள் வளர்ப்பு குறித்த செய்முறை பயிற்சியை மாணவர்களுக்கு பூச்சியியல் பேராசிரியர் சுரேஷ் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, கதண்டு என்று அழைக்கப்படும் மஞ்சள் குளவி, பேராசிரியர் சுரேஷ் மற்றும் மாணவர்களை தாக்கியது.
இதில் படுகாயமடைந்து மயங்கிய பேராசிரியர் மற்றும் 18 மாணவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
ஆனால், பேராசிரியர் சுரேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துபோனார். 18 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மஞ்சள் குளவி கடித்து பேராசிரியர் ஒருவர் பலியான சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.