தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
1 min read
Heavy rain warning for Tamil Nadu for two days.
2.7.2026
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தமிழகத்தில் , நாளையும் நாளை மறுநாளும் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2-3 நாட்களில் மேலும் வலுப்பெறக்கூடும்.
நாளை ஜூலை 3ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- கோவை (மலைப்பகுதிகள்)
- நீலகிரி
ஜூலை 4ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- கோவை
- நீலகிரி
- கன்னியாகுமரி
தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.