July 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கோவில்களில் முறைகேடுகள் பற்றி ஆன்லைன் மூலம் புகார் செய்யலாம்

1 min read

Complaints regarding irregularities in temples can be filed online

4.7.2026
இந்து சமய அறநிலையத்துறை முறைகேடுகள் குறித்து நேரடியாகப் புகார் அளிக்க அமைச்சர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக அவரது அறிக்கை வருமாறு:-

அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோவில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோவில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் [email protected] முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள்.

நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *