குழந்தைகள் வன்கொடுமை: மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்
1 min read
Child abuse: Central Government issues notice to Meta
3/7/2026
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டதாக வந்த புகாரை தொடர்ந்து அதன் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் குழந்தைகள் மீ தான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரங்கள், டெலிகிராம் செயலிக்கு பயனர்களை அழைத்து சென்றதுடன், தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை 99 ரூபாய்க்கு விற்றதும் தெரிய வந்தது. இன்ஸ்டாகிராம் விதிமுறைகளின்படி, அதன் தணிக்கை தொழில்நுட்பத்தால் முதலில் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்படுகின்றன. இந்த விளம்பரங்கள்,எங்களின் சமூக வழிகாட்டு நெறிமுறைகளை மீறவில்லை எனவும் இன்ஸ்டாகிராம் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கும்படி மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே பயனர் பெயர் முறையை வாட்ஸாப்பில் அறிமுகம் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.