தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்மாவட்ட ஆட்சியர் ஆய்வு
1 min read
District Collector inspects Tenkasi District Government Headquarters Hospital
9/7/2026
தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற பசுமையாக்கல் திட்டம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
தென்காசி நகராட்சி சார்பில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நகராட்சி பூங்காவில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் எலைட் இணைந்து நகர்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் அடர்வனம் மரக்கன்று நடும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், மரக்கன்றினை நட்டு துவக்கி வைத்தார். நகராட்சி பூங்காவை பசுமையான பூங்காவாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, நுண் கதிர் அறை, இருதய சிகிச்சை பிரிவு (ECHO) ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மருத்துவமனைக்கு வந்திருந்த மருத்துவ பயனாளிகளிடம் அடிப்படை வசதி குறித்தும், மருத்துவர்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், நகராட்சி ஆணையாளர் சரவணன். மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டர் கீதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.