தென்காசி: சிறந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை
1 min read
Tenkasi: Financial assistance for outstanding writers from Adi Dravidar and Tribal communities.
9/7/2026
தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு அச்சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா ரூ. 100,000/- ஆக நிதி உதவி உயர்த்தி வழங்கப்படுகிறது.
இந்நேர்வில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பத்தை தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், tn.gov.in என்ற இணைய தளத்தில் 2 बोबा (website)https://cms.tn.gov.in/cms migrated/document/forms/best writers award application form 2025 2026.pdf என்ற Link இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள். 3108.2026 விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் (Digital) முறையிலும், உரிய படிவத்தில் அனுப்ப வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.