கடையம் போலீஸ் சரகம் மேட்டூர் போதை ஒழிப்பு கிராமமாக தேர்வு
1 min read
Mettur in the Kadayam police limits selected as a drug-free village
9/7/2026
தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேட்டூர் கிராமம் தென்காசி மாவட்டத்தின் முதல் போதை ஒழிப்பு கிராமமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு அறிவுரை படி தென்காசிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் வழிகாட்டுதலின்படி ஆலங்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் ஆலோசனையின் பேரில் கடையம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் கடையம் காவல் சரகம் மேட்டூர் கிராமம் போதை ஒழிப்பு கிராமமாக அடையாளப் படுத்தப்பட்டு முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மேட்டூர் கிராமத்தின் முக்கிய பிரமுகர் டேவிட் செல்வராஜ் தலைமையில் நடத்தப்பட்டது. கடையம் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்..சுரேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் அ.மாடசாமி மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மேட்டூர் கிராமத்தில் அனைத்து விதமான போதை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது .தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டது. இது போன்ற முன்மாதிரி முன்னெடுப்புகளை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.