July 9, 2026

Seithi Saral

Tamil News Channel

என்.ஐ.ஏ. சோதனை: நாட்டை சீர்குலைக்க சதி செய்த 4 பேர் கைது

1 min read

NIA Raid: 4 Arrested for Plotting to Destabilize the Country

9.7.2026
தேசிய புலனாய் அதிகாரிகள் ஆந்திரா மாநிலம், விஜயவாடா, பஞ்சா சென்டர், நைஜாங் கேட்டு, கொல்ல பாலம் கட்டு ஆகிய இடங்களில் சோதனை செய்தனர்.

சோதனையில் முகமது ரஹ்மத்துல்லா, செரீப், மிர்ஷா சோகைல் பெய்க் மற்றும் முகமது டேனிஷ் ஆகியோர் வீடுகளில் இருந்து சிம்கார்டுகள் செல்போன்கள் டி-ஷர்ட்டுகள் கைக்குட்டைகள் டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் சாதனங்கள் தடயவியல் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர்களது நண்பர்களின் வீடுகளிலும் சோதனை செய்தனர். இவர்கள் ஒரு குழுவை உருவாக்கி தடை செய்யப்பட்ட அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து உள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் உத்தரவின் பேரில் இந்தியாவை சீர்குலைக்க சதி செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர். இதேபோல் தெலுங்கானா மாநிலம் மலக்பேட்டையில் உள்ள சைதாபேகம் பகுதியில் ஒருவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *