அமர்சேவா சங்கத்தில் முதுகு தண்டுவடம் – பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டோருக்கான சிறப்பு மையம்
1 min read
Special center for individuals affected by spinal cord injuries and paralysis at Amar Seva Sangam
13/7/2026
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் முதுகு தண்டுவடம், மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தலைமை விருந்தினராக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜீவ் கட்டடத்தை திறந்து வைத்து சிறப்புத்தார்.
இவ்விழாவில் அமர்சேவா இல்ல குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் கலை நிகழ்ச்சியை கண்டு களித்தார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐபி எம் இந்தியன் குரூப் சிஎஸ் கிருஷ்ணசாமி, செல்வநாயகம் ஃபாரஸ்ட் ஆபிஸர் மற்றும் தவெக மாவட்ட செயலர் நியாஸ், மற்றும் ஆடிட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் இராஜீவ் பேசும்போது கூறியதாவது:-
ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் சேவைகளை பாராட்டி பேசினார். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்து வரும் அமர்சேவா சங்கத்திற்கு தமிழக அரசு சார்பில் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
அமர்சேவா சங்கத்தின் மேம்பாட்டு இணை தலைவர் மற்றும் செயலர் சங்கரராமன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். தலைவர் பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் கமிட்டி உறுப்பினர் பட்டம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அமர்சேவா சங்கத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு குழந்தைகளின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் மூலம் பள்ளி வேன் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் வைஸ் பிரசிடென்ட் இன்ப மணி கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ஜெய்சங்கர் அட்மின் ஆபிஸர் சி.எஸ். கிருஷ்ணசாமி முன்னாள் எம்எல்ஏ, டி எஸ் ஆர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். தலைமை கணக்கர் ராஜேஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மக்கள் தொடர்பாளர் சண்முகம் அனைவருக்கும் நன்றி கூறினார்.