July 15, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகள் விழிப்புணர்வு முகாம்

1 min read

Awareness camp for tuberculosis patients at Kadayam Primary Health Centre

14.7.2026
தென்காசி மாவட்டம், கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய அரசின் நிக்ஷய் ஷ்விர் (nikshay shvir) திட்டத்தின் கீழ் காசநோயாளிகள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

காசநோயால் பாதிக்கபட்டவர்களுக்காக இந்தியா முழுவதும் மத்திய அரசால் நிக்ஷய் ஷ்விர் (nikshay shvir) எனும் திட்டத்தின் மூலம் 100 நாட்கள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக தென்காசி மாவட்டம் கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிக்ஷய் ஷ்விர் (nikshay shvir) முகாம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சங்கரி தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் கலந்து கொண்ட மருத்துவ பயனாளிகளிடயே உரையாற்றிய கடையம் வட்டார மருத்துவ அலுவலர் சங்கரி மற்றும் வட்டார காசநோய் சிகிச்சை முதுநிலை மேற்பார்வையாளர் சாமுவேல் ஞானராஜ் ஆகியோர் காசநோய்க்கான அறிகுறிகள் குறித்தும் நோயை வருமுன் தடுக்கும் முறைகள் குறித்தும் காசநோயை குணப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் மருத்துவப் பயனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

முகாமில் கலந்துகொண்ட மருத்துவ பயனாளிகளுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ் ரே வாகனம் மூலம் எக்ஸ் ரே எடுத்து பரிசோதிக்கப்பட்டது. மேலும், எச்சில் மாதிரிகளும் சேகரிக்கப்பாட்டு பரிசோதிக்கப்பட்டது.

நிக்ஷய் ஷ்விர் (nikshay shvir) முகாமில் கலந்து கொண்ட மருத்துவ பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளும் ஆலோசனைகளும் தங்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் கூறினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *