இந்திய அஞ்சலுக்கான சின்னம் வடிவமைப்பு போட்டி
1 min read
Logo Design Competition for India Post
14.7.2026
இந்திய அஞ்சல் துறையானது, தனது நம்பகத்தன்மை, சேவை மனப்பான்மை, மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ சின்னம் உருவாக்குவதற்கான போட்டியை இணைய தளத்தின் மூலம் நடத்துகிறது.
இப்போட்டி 15.07.2026 முதல் 15.08.2026 வரை நடைபெறுகிறது. இந்தியக் குடிமக்கள் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். வயது வரம்பு எதுவம் கிடையாது.
இப்போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். சின்னம் வடிவமைப்பு போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறுவோருக்கு முறையே ₹75,000/-, ₹50,000/-மற்றும் ₹25,000/- ரொக்கப் பரிசுகளுடன் சான்றிதழும் வழங்கப்படும். மேலும், சின்னத்திற்கு பெயர் சூட்டும் போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறுவோருக்கு முறையே ₹25,000/-, ₹15,000/- மற்றும் ₹10,000/- ரொக்கப் பரிசுகளுடன் சான்றிதழும் வழங்கப்படும்.பங்கேற்பாளர்கள் தாங்கள் வடிவமைக்கும் சின்னத்துடன் அதன் கருத்தை விளக்கும் குறிப்பு மற்றும் சின்னத்திற்கான பெயரையும் இணைத்து இணையவழியாக MyGov தனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுமக்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் படைப்பாற்றல் மிக்க அனைவரும் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று சிறப்பான பரிசகளை வெல்லுமாறும், போட்டி குறித்த மேலும் விபரங்களுக்கு இணையதளம் https://www.mygov.in/ பார்வையிடுமாறும் கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.