July 15, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் மக்களின் குறைகளை கேட்டஅமைச்சர் ராஜீவ்

1 min read


Minister Rajiv hears public grievances in Kadayam

14.7.2026
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அமைச்சர் ராஜீவ் கடையத்தில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் கள ஆய்வு செய்த தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சரும் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மருத்துவர் ராஜீவ் கடையத்தில் அம்பேத்கர் காலனிக்குச் மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

அமைச்சரிடம், அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக பேருந்திற்காக சுமார் மூன்று கிலோமீட்டர் நடந்தோ அல்லது வேறு வாகனங்களிலோ பயணம் செய்து கடையம் பேருந்து நிலையம் சென்றுதான் பிற ஊர்களுக்கு செல்லவேண்டிய நிலையுள்ளது. இதனால், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுவதாக கூறிய பொதுமக்கள் எனவே, தங்களுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. எனவே, இப்பகுதி மக்கள் தொகைக்கேற்ப அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரவேண்டுமெனவும், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டுமெனவும், தங்களுக்கு பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் குறைகளை கேட்டுக்கொண்ட அமைச்சர் ராஜீவ் அனைத்து குறைகளையும் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

ஆய்வின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் டி.பி.வி.வி. விபின் சக்கரவர்த்தி கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் லெச்சிய காந்தன், பொருளாளர் விவேக் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *