July 15, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருவியில் போலீசாரை தாக்கிய 6 பேர் கைது

1 min read

Six people arrested for assaulting police personnel at Courtallam Falls

14.7.2026
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் நீராடுவதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளன

இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு குற்றாலம் பிரதான அருவியில் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஒருவழி பகுதி வழியாக குளித்துவிட்டு மற்றொரு பகுதி வழியாக சுற்றுலா பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் தலைமை காவலர் முத்துராஜ் மற்றும் சிறப்பு காவல் படையை சேர்ந்த 4ஆண் போலீசாரும் இரண்டு போலீசாரும் பணியில் இருந்த பொழுது சிவகாசி வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் புழுவாண்டி, சதீஷ்குமார், பெரிய கருப்பசாமி, முனீஸ்வரன், சரவணன்,ஆகியோர் போலீசார் சுற்றுலா பயணி வெளியேற்றிய பாதை வழியாக மீண்டும் குளிக்க சென்ற பொழுது அவர்களை அந்த வழியே வரக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது இதன் காரணமாக இவர்கள் ஆறு பேரும் அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் முத்துராஜ் உள்ளிட்ட போலீசாரை தாக்கி பெண் போலீசாரை ஆபாசமாக பேசியுள்ளனர். இதில் தலைமை காவலர் முத்துராஜ் வடுகாயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் காவல்துறை உதவி ஆய்வாளர் முத்து திலகர் ஆறு நபர்களையும் கைது செய்து எட்டு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துசெங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை அடைத்தனர். போலீசாரை சுற்றுலா பயணிகள் தாக்கிய சம்பவம் குற்றாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குற்றாலம்வரும் சுற்றுலா பயணிகள் மது போதையில் பணியில் இருக்கும் காவலர்களிடம் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்த வண்ணம் உள்ளன.

இது போன்ற குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் சரியான தண்டனை வழங்கி தண்டிக்க உண்மைதான் இது போன்ற குற்ற செயல்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *