July 16, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆடித்தபசு: தென்காசி மாவட்டத்திற்கு 28ம்தேதி உள்ளூர் விடுமுறை

1 min read


Aadi Thapasu: Local holiday for Tenkasi district on the 28th

16/7/2026
வரும் ஜூலை 28 அன்று ஆடித் தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் அறிவித்துள்ளார்

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் விடுத் துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம்,
சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோயில் ஆடித்தபசு திருவிழா வருகிற 28ம்தேதி செவ்வாய்கிழமை அன்று நடைபெற உள்ளது. அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குட்பட்டு 28.07.2026 அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசி ரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

தென்காசி மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 01.08.2026 சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *