July 16, 2026

Seithi Saral

Tamil News Channel

முத்துமாலைபுரம் மாலைநேர படிப்பகத்தில் காமராஜர் பிறந்த தின விழா

1 min read

Kamarajar’s Birthday Celebration at the Muthumaalaipuram Evening Reading Centre

16.7.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள
முத்துமாலைபுரம் மாலைநேர படிப்பகத்தில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது,

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலராக மறைந்த ஆதிநாராயணனின் சொந்த ஊரான முத்துமாலைபுரத்தில் அவர் வசித்த குடும்ப வீடானது கிராமப்புற மாணவ, மாணவிகள் படிப்பதற்காக ஆதிநாராயணன், சந்திரலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மடத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி பரிமேலழகன் (மடத்தூர்) கலந்து கொண்டு மலர் தூவி, புகழ் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் காமராஜர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் .
முன்னதாக மாணவர்கள் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் குறித்து விரிவாக பேசியும், பாட்டு பாடியும் அசத்தினர். இசக்கி முத்து என்ற மாணவன் காமராஜர் வேடமிட்டு, பெருந்தலைவர் பற்றி பேசி அனைவரையும் கவர்ந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *