July 16, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழலுக்கு எதிரான கைரேகை பதிவு இயக்கம்

1 min read

Anti-corruption fingerprint registration campaign by the Congress party in Kadayam

16.7.2026
தென்காசி மாவட்டம் கடையம் சின்னத்தேர் திடலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கடையம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அழகுதுரை, முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மகளிரணி தலைவி சீதாலட்சுமி முன்னிலை வகித்தார். காங்கிரஸ் மாநில பேச்சாளர் தங்கம்மாள் வரவேற்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி காமராஜர் படத்திற்கு மாலைகள் அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. கே.ரவி அருணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் அமீர்கான், ஆலங்குளம் வட்டார தலைவர் ரூபன், ஆழ்வார்குறிச்சி பேரூர் தலைவர் முருகன், பாப்பாக்குடி தினகரன்,
இளைஞரணி தலைவர் பால்சாமி, கீழப்பாவூர் நகர தலைவர் சிங்கக்குட்டி, வட்டாரத் துணை தலைவர் ராமசந்திரபாண்டியன் ஆகியோர் பேசினார்கள்.

மேலும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சாஸ்தா, ஜெபராஜ், ஆசீர், அந்திரேயா,
செல்வகுமார், வெள்ளதுரை, மாரியப்பன், வடிவேல், முப்பிடாதி, சுப்பிரமணியன், முத்துராஜ், செண்டு, முருகன், நயினார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக தங்களது கைரேகைகளை பதிவு செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *