July 16, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் சாரல் திருவிழா பற்றி மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

1 min read

District Collector holds consultation on the Courtallam Drizzle Festival.

16.7.2026
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டும் சாரல் திருவிழாவினை சிறப்பாக நடத்திட நேற்று
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குற்றாலம் சாரல் விழா 2026 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு குற்றாலம் சாரல் திருவிழாவை எந்த தேதியில் நடத்துவது, எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் குற்றாலம் சாரல் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *