முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற புஸ்சி ஆனந்த்
1 min read
Pussi Anand met Chief Minister Vijay and received his best wishes.
18.7.2026
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் இன்று தனது 62-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தவெக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினார். அதேபோல, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள புஸ்சி ஆனந்த் வீட்டிலும் காலை முதலே நுற்றுக்கணக்கான தவெகவினர் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், முதல் அமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை சந்தித்து புஸ்சி ஆனந்த் வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான பதிவை தனது எக்ஸ் தளத்தில், விஜய்யை சந்தித்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். புஸ்சி ஆனந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;-
இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.