July 28, 2026

Seithi Saral

Tamil News Channel

கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு

1 min read


Chief Minister Vijay inspects the Koyambedu sewage treatment plant.

27.7.2026
கொட்டும் மழையில் சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். மழையில் காத்திருந்த மக்களை கண்ட அவர், கைகளை அசைத்து உற்சாகமூட்டினார்.
முதல்வராக பதவியேற்ற விஜய், அவ்வப்போது மாலை நேரங்களில் ஆய்வு பணிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். அதன்படி, இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள 3ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்றார்.
அங்கு சுத்திகரிப்பு நிலையம் எவ்வாறு செயல்படுகிறது, பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் விவரங்களை கேட்டறிந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர் அங்கு ஆய்வு நடத்தினார்.

ஆய்வுப்பணிகளை முடித்த பின்னர், வளாகத்தை விட்டு வெளியே வந்த முதல்வர் விஜய் சாலையின் இருபுறமும் காத்திருந்த மக்களை பார்த்து கைகளை அசைத்தார். கையில் குடை பிடித்தவாறு அவர் கிட்டத்தட்ட 500 மீட்டர் தொலைவு நடந்த படியே சென்றார்.

முதல்வரை பார்த்த மகிழ்ச்சியில் பொதுமக்களும் உற்சாகமாக குரல் எழுப்ப, அனைவரையும் பார்த்து புன்னகை பூத்தபடியே நடந்து சென்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *