தென்காசி கூடைப்பந்து போட்டியில் தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை
1 min read
Tenkasi Oxford School achieves a record in the Tenkasi basketball tournament.
27.7.2026
தென்காசி குறுவட்ட அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் தென்காசி இ.சி. ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றன. அதில் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சத்ய ஸ்ரீனிவாசன், ஆகாஷ், ராகவன், விஷ்ணுராம், பரத்ராம், ரோகித் கிருஷ்ணா, கவின்ராம், மித்ரேஷ் வசந்த், முகம்மது அப்துல் பதாக், ராகவ், ஆதிஷ் மற்றும் முகமது ஆஷிப் ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று மாவட்ட அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் ஜோசப் லியாண்டர், ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான மிராக்ளின் பால் சுசி, பள்ளி முதல்வர் கோல்டு பெல்லா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், மணிகண்டன், பால்மதி,சதிஷ் குமார்,ராமர், கலையரசன்,மகேஷ், மாரியம்மாள், கணேசன், மாலினி,கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.