தென்காசி: திருமணமான 5வது மாதத்தில் மனைவி வெட்டிக்கொன்ற மெக்கானிக்
1 min read
Tenkasi: Mechanic hacked to death by wife five months after marriage
27.7.2026
தென்காசி மங்கம்மா சாலை பகுதியை சேர்ந்தவர் வீர மணிகண்டன் (வயது33). இவர் அப்பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 5 மாதம் ஆகிறது. இவரது மனைவி அன்னலட்சுமி என்ற அபி(வயது 23). இவர்களுக்கு திருமணம் ஆன 1 வாரத்தில் இருந்தே பிரச்சினை இருந்து வந்துள்ளது. அப்போதே இவர்கள் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலையும் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்குள இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில் வீட்டில் வைத்திருந்த அரிவாளால் மனைவி அன்னலட்சுமி என்ற அபியை சரமாரியாக மணிகண்டன் வெட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர் போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்னலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தியதில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே தாம்பத்திய உறவில் விரிசல் இருந்ததாகவும் அதன் காரணமாக மனைவியை கணவர் கொலை செயாதிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் போலீசார் வீரமணிகண்டனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்த பின்பு தான் இந்த கொலைக்கான காரணம் பற்றி முழுமையான விவரம் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
திருமணம் முடிந்து 5 மாதத்தில் கணவன் மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் தென்காசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.