குற்றாலம் ஸ்ரீசித்தேஸ்வரி பீடம் மௌனசுவாமி மடத்தில்சாதுர்மாஸ்ய தீட்சை விழா
1 min read
Chaturmasya Diksha Festival at the Mouna Swami Mutt, Sri Siddheswari Peetham, Courtallam
18.7.2026
தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீசித்தேஸ்வரி பீடம் மௌனசுவாமி மடத்தில் சாதுர்மாஸ்ய தீட்சை விழா நாளை (29.07.2026) புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது
இதுபற்றி குற்றாலம் ஸ்ரீசித்தேஸ்வரி பீடம் மௌனசுவாமி மடத்தின் மேலாளர்.என்.வி.எஸ்.ஆர்.சி. மூர்த்தி ராஜு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம்,
ஸ்ரீசித்தேஸ்வரி பீடம், மௌனசுவாமிமடத்தில் சாதுர்மாஸ்ய தீட்சை விழா நாளை 29.07.2026 புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது
ஸ்ரீ வியாச பூர்ணிமா எல்லா பானங்களையும் போக்கும் சாதுர்மாஸ் காலத்திற்கு தொடங்குகிறது. இதுவே தற்போதைய வழிபாட்டின் புண்ணியமாகும்
வணக்கத்திற்குரிய சித்தேஸ்வரி பீடாதிபதி, புகழ்பெற்ற யோகி நடமாடும் தெய்வம், பரமஹம்ச பரிவ்ராஜகாச்சார்யா
ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வரானந்த பாரதி மஹாஸ்வாமி களின் ஆசியுடன் பீடத்தின் உத்திராதிகாரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தத்தேஸ்வரானந்த பாரதி சுவாமிகள்
ஸ்ரீ பராபவ நாம ஆண்டின்
நான்கு மாதத்திற்கான தீட்சை விழா நாளை
29.07.26 புதன்கிழமை ஆஷாட பூர்ணிமா (வியாச பூர்ணிமா) காலை 10 மணிக்கு குற்றாலம்
ஸ்ரீ சித்தேஸ்வரி பீடம்,
ஸ்ரீ மௌனசுவாமி மடத்தில் வைத்து நடைபெற உள்ள இந்த விழாவில் பக்தர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு குற்றாலம் ஸ்ரீசித்தேஸ்வரி பீடம் மௌனசுவாமி மடத்தின் மேலாளர்.என்.வி.எஸ்.ஆர்.சி. மூர்த்தி ராஜு தெரிவித்துள்ளார்.