July 30, 2026

Seithi Saral

Tamil News Channel

மேகதாது விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்

1 min read

Chief Minister Vijay urges the Prime Minister to intervene immediately in the Mekedatu issue

28.7.2026
மேகதாது அணை கட்ட தமிழக ஒப்புதல் தேவையில்லை என்ற பதிலுக்கு முதல்-அமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகா காவிரி குறுக்கே அமைப்பை உருவாக்க கீழ்ப்படியான மாநிலங்களின் ஒப்புதல் பெற தேவையில்லை என்ற நீர்வளத்துறை பதிலை திரும்ப பெற வேண்டும். 2018- ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்த மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி கருத்து ஏமாற்றமளிக்கும் பதில். மேகதாது அணை திட்டத்துக்கு எந்தவிஅத சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக்கூடாது,

காவிரி என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம்.கடைமடை மாநில அனுமதியின்றி மேலே உள்ள மாநிலம் அணை கட்ட முடியாது. நீர்வளத்துறை இணைமந்திரி அளித்த பதிலை திரும்ப பெற உத்திரவிட வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீரின் அளவு, நீர்வரத்து சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேகதாது அணைக்கு எந்த அனுமதியும் தரக்கூடாது.முழுமையான தொழில்நுட்ப, சட்டப்பூர்வ ஆய்வுக்கு பிறகே இத்திட்டம் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.தமிழகம் ஒப்புதலின்றி கட்டுமானம் கூடாது.

கீழ்பாசன மாநிலங்களுக்கு செல்லும் நீரின் அளவை பாதிக்கும் திட்டத்தை ஒப்புதலின்றி செயல்படுத்த முடியாது. மேகதாது அணை திட்டத்துக்கு எந்தவித சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக்கூடாது. மேக தாது விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.

என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *