July 30, 2026

Seithi Saral

Tamil News Channel

கல்லூரணி பொன்சுடலை மாடசாமி கோவில் கொடை விழா

1 min read

Kallurani Ponsudalai Madasamy Temple Festival

28/7/2026
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள
கல்லூரணி ஸ்ரீபொன்சுடலை மாடசாமி கோவில் கொடைவிழா 30,31ந்தேததிகளில் நடைபெறுகிறது.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணியில் அமைந்துள்ள பொன்சுடலைமாடசாமி கோவில் கொடை விழா இன்றும் (வியாழன்) நாளையும் (வெள்ளி) நடைபெறவுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், 6.30 மணிக்கு அன்னதானமும், தொடர்ந்து குலசை புகழ் ராமர், முருகேசன் குழுவினரின் வில்லிசையும், இரவு 7.30 மணிக்கு பிரைட் திரைப்பட கச்சேரி, இரவு 10 மணிக்கு மோகனா குழுவினரின் மகுட ஆட்டமும், 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறுகிறது.

நாளை (வெள்ளி) காலை 10 மணிக்கு நையாண்டி மேளத்துடன் குற்றாலம் புனித நீர் பவனி வருதல், மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜையை தொடர்ந்து அன்னதானம், இரவு 8 மணிக்கு கரக ஆட்டம், ராஜா ராணி ஆட்டம் நடைபெறுகிறது.

நள்ளிரவு 12 மணிக்கு வாணவேடிக்கையுடன் உச்சிகால பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கல்லூரணி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *