தென்காசி ஆட்சியர் மாணவர்களுடன் கலந்துரையாடல்
1 min read
Tenkasi Collector interacts with students.
28.7.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உடன் மாவட்ட மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உரையாடிய Coffee with the Collector நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிமாணவர்களுடன் மாவட்டஆட்சியர் ரஞ்ஜீத் சிங், கலந்துரையாடியதாவது,
மாணவர்கள் கல்வி, ஒழுக்கம், முன்னேற்ற சிந்தனை, விடாமுயற்சி ஆகிய பண்புகளில் எவ்வாறு தங்களை ஈடுபடுத்திக் கொள்வது என்பது பற்றிய ஆலோசனைகளை வழங்கினார். இந்திய ஆட்சிப் பணிக்கு கடந்து வந்த பாதைகளை மாணவர்கள் ஆர்வம் கொள்ளும் வகையில் விளக்கம் அளித்தார். நேரத்தை சரியாக நிர்வகிக்கவும், குறிக்கோள்கள் அமைக்கவும், தவறுகளைப் புரிந்து கற்றுக்கொள்வது முக்கியம் என்றார்.
உங்களை ஊக்கப்படுத்தும் மற்றும் உங்களுடன் உழைக்கும் நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள், கேள்வி கேட்க பயப்பட வேண்டாம். அடிக்கடி உங்கள் ஆசிரியர்களிடம் அல்லது நண்பர்களிடம் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பாடத்தையும் அடிப்படையிலிருந்து புரிந்து கொள்ள முயற்சியுங்கள். முக்கியமான பாடங்கள் மற்றும் செயல்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். குறிக்கோள்களை அடைந்த பிறகு உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இவை உங்கள் வளர்ச்சிக்கு மட்டும் இல்லாமல், ஒரு சிறந்த வாழ்க்கை முறையை உருவாக்க உதவும். பாடப்புத்தகங்களுடன் மட்டுமல்லாமல் கூடுதல் தகவல்களை புத்தகங்கள். இணையம் மற்றும் மனித உறவு செயல்பாடுகள் மூலம் கண்டறியுங்கள் எனவும். மாணவர்கள் தங்களது கல்வி பயணம், எதிர்கால திட்டங்கள், விருப்பங்கள், சமூகம் குறித்தான தங்களது பார்வை குறித்து பகிர்ந்து கொண்டனர்.
கல்வி கற்கும்போது நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கற்றால் ஒருவரது அறிவு மற்றவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். கல்வி, நட்பு, விளையாட்டு ஆகியவற்றை எவ்வாறு தினசரி வாழ்வில் சமநிலைப்படுத்தி கையாள்வது போன்ற மாணவர்களின் வினாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடை அளித்தார்.
மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் பணி அலுவலக நடை முறைகள் சார்ந்து தங்களுக்கு
இருந்த பல ஐயங்களை கேட்டு தெளிவு பெற்று, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆளுமையின் செயல்பாடு களைப் புரிந்துகொண்டனர். மாணவர்கள் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட மாணவர் தலைமையிலான யோசனைகள் மற்றும் முன்னெடுப்புகளை மாவட்ட
ஆட்சியருடன் பகிர்ந்து கொண்டனர். மேலும், மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அ.ரேணுகா, மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாதிரிப் பள்ளியினைச் சார்ந்த மாணவர் மன்ற உறுப்பினர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.