செங்கோட்டையில் தொடர் திருவாசகம் முற்றோதுதல்
1 min read
Continuous Recitation of the Entire *Thiruvasagam* at Sengottai
29.7.2026
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி தொடர் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.
செங்கோட்டை இலத்துார் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி மாபெரும் தொடா் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உத்ரா பொதிகை திருவாசக முற்றோதுதல் திருவாசக பாராயண அடியார்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று திருவசாக முற்றோதுதல் தொடங்கியது. ஆகஸ்டு 4ஆம் தேதி வரையில் மாபெரும் திருவசாக முற்றோதுதல் நடந்தது. முன்னதாக நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் இராம்நாத், தங்கையா, ஆடிட்டர்சங்கர், கோபாலகிருஷ்ணன், சண்முகம், செண்பகராமன், வீரபுத்திரன், கணேசன் மாரியப்பன், வள்ளிநாயகம், குமார், முருகன், குருவாயூர்கண்ணன், விசு, சண்முகசுந்தரம், ராமலெட்சுமி, முத்துலெட்சுமி, லெட்சுமி, பழனியம்மாள், லெட்சுமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா்.