July 30, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளரை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

1 min read

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 3; shaking: 0.038385; highlight: 1; motionR: 65536; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0547,0.0000; brp_del_sen: 0.1300,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:07:29 12:21:10; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (200, 0);aec_lux: 180.42169;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65537;weatherinfo: weather:null, icon:null, weatherInfo:100;temperature: 40;zeissColor: bright;

Attention-drawing protest in Pavoorchatram condemning the Sub-Registrar.

29.7.2026
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளரை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளர் அலுவலம் அமைந்துள்ளது. இங்கு கீழப்பாவூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பத்திரபதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதிதாக சார்பதிவாளர் நியமனம் செய்யப்பட்டார். அவர் பத்திர பதிவுக்கு வரும் பத்திரங்களில் பெரும்பாலானவற்றை சட்ட விதிகளுக்கு புறம்பாக பதிவு மதிப்பு கடிதத்தை கொடுத்து திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள், ரியல் எஸ்டேட்தாரர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட பதிவாளரிடம் புகார் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு சார்பதிவாளரை கண்டித்தும், இதனை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, வழக்கறிஞர் ஏ.பி.அருள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். மக்கள் நலனுக்கு எதிராகவும், அரசிற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துவதியும், மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலையை எற்படுத்தும் வகையில் செயல்படும் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *