July 30, 2026

Seithi Saral

Tamil News Channel

பயிர்களுக்கு உடனே காப்பீடு செய்ய உதவி இயக்குனர் அறிவுறுத்தல்

1 min read

Assistant Director instructs to insure crops immediately.

30/7/2026
வேளாண்மைத்துறை செய்தி இயற்கை சீற்றங்களான புயல் வெள்ளம் அதிகமான மழை வறட்சி ஆகிய வற்றால் வேளாண்மை பெரு மக்களின் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பாதுகாப்புக்கு பயிர் காப்பீடு செய்திட நாளை 31-07-2026 கடைசி நாளாகும் என தென்காசி செங்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைச்சாமி தெரிவித்துள்ளார்.

தென்காசி செங்கோட்டை வட்டாரங்களில் அறிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் நெல் உளுந்து நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு காரீப் பருவத்தில் காப்பீடு செய்யலாம் நெல் பயிருக்கு காப்பீடு தொகை ஒரு ஹெக்டேருக்கு ரூ 92008 பிரிமிய தொகை ஒரு ஏக்கருக்கு ரூ 745 கடைசி நாள் 31-07-2026 நிலக்கடலை காப்பீடு தொகை ரூ 65949 ஒரு ஹெக்டேருக்கு ஏக்கருக்கு பிரிமியத்தொகை ரூ 534 கடைசி நாள் 31-07-2026 உளுந்து காப்பீடு தொகை ரூ46289 ஒரு ஹெக்டேருக்கு ஏக்கருக்கு பிரிமியத்தொகை ரூ 374 கடைசி நாள் 31-07-2026 ஆகவே வேளாண் பெருமக்கள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ சேவை மையங்களில் தங்களின் பட்டா அடங்கல் ஆதார் எண் வங்கி கணக்கு எண் கொண்டு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என தென்காசி மற்றும் செங்கொட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைச்சாமி தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *