July 30, 2026

Seithi Saral

Tamil News Channel

திமுக அறக்கட்டளை சொத்து தனிப்பட்ட சொத்து ஆகாது: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

1 min read


DMK Trust assets are not personal assets: Case against M.K. Stalin dismissed.

29.7.2026
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்துள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக சென்னை ஐகோர்டில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் சிவஞானசம்பந்தம் என்பவர் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், திமுக அறக்கட்டளைக்கு வாங்கப்பட்ட நிலத்தின் விவரங்களை அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தங்களது மற்றும் தங்களைச் சார்ந்தவர்களின் தனிப்பட்ட சொத்து விவரங்களை மட்டுமே பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும். அறக்கட்டளை என்பது ஒரு தனித்துவமான அமைப்பு ஆகும். எனவே, அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துக்களை ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது என்று கூறியது.

மேலும், அறக்கட்டளை சொத்துக்களை வேட்புமனுவில் குறிப்பிடத் தேவையில்லை என்று தெளிவுபடுத்திய நீதிமன்றம், மு.க.ஸ்டாலின் சொத்து விவரங்களை மறைக்கவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், வழக்கைத் தொடர்ந்த சிவஞானசம்பந்தமும் தனது மனுவை வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *