தென்காசியில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
1 min read
All-Department Pensioners’ Association stages protest in Tenkasi.
30.7.2026
தமிழ்நாடு அரசு அணைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலமைய முடிவின்படி ஓய்வூதியர்களின் நலனை பாதிக்கும் புதிய காப்பீட்டத் திட்ட அரசாணை எண் 123 நாள் 24-6-26யை ரத்து செய்து மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி வட்ட துணை தலைவர் பாலசிங் பொன்ராஜ் தலைமையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தென்காசி மாவட்ட தலைவர் தோழர் ஜாக்டி கே.மாரியப்பன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
மேனாள் மாவட்ட செயலாளர் சலீம் முகம்மது மீரான் கோரிக்கை விளக்கவுரை யாற்றினார் தமிழ்நாடு சமுகநலத்துறை பணியாளர் சங்க மேனாள் மாநில பொதுச் செயலாளர் தோழர் க.துரைசிங், மற்றும் மாவட்ட இணை செயலாளர் தோழர் செல்லப்பா ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். நிறைவாக மாநில துணை தலைவர் தோழர் பேராசிரியை சங்கரி நிறைவுரையாற்றினார் வட்ட செயலாளர் அருணா பிரபாகர் நன்றியுரையாற்றினார்.
ஒய்வூதியர் சங்க நிர்வாகிகள் மோகனசுந்தரம், சுந்தரமூர்த்தி நாயனார், கே.ராமசாமி, சிவகாமி, இசக்கி, அருணாசலம், வரதராஜன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஒய்வூதியர்கள் கலந்து கொண்டனர்