தென்காசி: கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு-தாளாளர் கைது
1 min read
Tenkasi: College correspondent arrested for repeatedly sexually harassing a female student.
30/7/2026
தென்காசி அருகே கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தாளாளர் கைது
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த வர்கீஸ் மகன் பினு(வயது40). இவர் தென்காசி அருகே உள்ள பண்பொழி பகுதியில் மருந்தியல் தொடர்பான ஒரு கல்லூரி நடத்தி வருகிறார். இங்கு கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்
. இந்த நிலையில் இந்த கல்லூரியில் படித்த ஒரு மாணவிக்கு இவர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி அனறைய தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு புகார் மனு அனுப்பினார். ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாதிக்கப்பட்ட மாணவி புகார் மனுவை மீண்டும் அனுப்பியுள்ளார்.
உனடியாக அந்த புகார் மனு தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. அதன்படி இங்குள்ள மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அதிரடியாக கல்லூரியின் தாளாளர் பினுவை கைது செய்தனர். இந்த சம்பவம் 2024-ல் நடந்தது என்றும் அப்போது இருந்தே அந்த மாணவி புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போது ஜோசப் விஜய் தலைமையிலான
அரசு இந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.