நெல்லையில் 2.2 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
1 min read
Two young men arrested with 2.2 kg of ganja in Nellai.
8.8.2026
நெல்லை மாநகரம் பெருமாள்புரம், மேலப்பாளையம் பகுதிகளில் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் மற்றும் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியான 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய போதை பொருளான கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர்களான பெருமாள்புரத்தைச் சேர்ந்த சுகுமார் (வயது 23), மேலப்பாளையத்தைச் சேர்ந்த திவான்மைதீன்(22) ஆகிய 2 பேரிடமும் இருந்து மொத்தம் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் 2 பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை சிறையில் அடைத்தனர்.