தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில்மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், ஆய்வு
1 min read
District Collector Ranjith Singh inspects the Tenkasi Government Headquarters Hospital
9.8.2026
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் இயங்கும் சீமாங் சென்டர் மற்றும் பச்சிளங்குழந்தை சிகிச்சை பிரிவு ஆகியவற்றையும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இயங்கும் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினையும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இயங்கும் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினையும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மாவட்ட மருந்து கிடங்கினையும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் இயங்கும் சகி- ஒருங்கிணைந்த சேவை மையத்தினையும், ரூ.600.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, சாம்பவர் வடகரையில் உள்ள கால்நடை பராமரிப்பு துறையின் சமூக நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையத்தினையும், கடையநல்லூர் வட்டாரம் குலையனேரி கிராமத்தில் NADP திட்டம் 2024 2025-இன் கீழ் நிரந்தர பந்தல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும், ஊர்மேலழகியான் கிராமத்தில் இயங்கும் ஆர். வி. எஸ் வேளாண் அறிவியல் மையத்தினையும் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.