தோரண மலையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
1 min read
Independence Day celebration at Thorana Malai
15.8.2026
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இங்கு ஆன்மீக பணிகள் மட்டுமின்றி பல்வேறு சமூகப் பணிகளும் நடைபெற்று வருகிறது குறிப்பாக மலை அடிவாரத்தில் நூலகம் சீருடை பணியாளர்களுக்கான தேர்வுக்கு உடற்பயிற்சி மைதானம் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்று எண்பதாவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னாள் ராணுவத்தினர்கள் கணபதி மற்றும் இருளப்பன் கொடியேற்றி சிறப்பித்தனர்.திருச்சி தீபா அவர்கள் தலைமையில் பக்தைகள் தேசபக்தி பாடல்கள் பாடி தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்றனர். முத்துமாலைபுரம் ஆதி நாராயணன் சந்திரலீலா மாலை நேர படிப்பகம் மாணவர்கள் தேசத் தலைவர்கள் வேடமிட்டு தேசிய கீதம் பாடினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்