சுதந்திர தின விழாவை ராகுல், கார்க்கே புறக்கணிப்பு
1 min read
Rahul and Kharge boycott Independence Day celebrations.
15.8.2026
காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்; ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் கார்கே. இருவருக்கும், மத்திய கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்க வேண்டும் என்பது மரபு. ஆனால், இந்தாண்டும், கடந்தாண்டும் ராகுல், கார்கே இருவரும் செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை.
வயது முதிர்ந்த கார்கேவுக்கு நீண்ட துாரம் நடந்து வர முடியாது, படி ஏற முடியாது என்பது காங்கிரஸ் கட்சியினர் கூறும் சொத்தைக் காரணங்களில் ஒன்று. ஆனால் அவர் வழக்கமாக பார்லியில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வந்து கொண்டு தான் இருக்கிறார்; இந்த விழாவுக்கு மட்டும் அவரால் வர முடியாதா என்று பா.ஜ கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
2024ம் ஆண்டு சுதந்திர தின விழாவில், ராகுலுக்கு இரண்டாம் வரிசையில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அவமதித்து விட்டதாகவும் கூறி, ராகுல் விழாவை புறக்கணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்தாண்டு ஒலிம்பிக் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு முதல் வரிசையில் இடம் அளிக்க வேண்டியிருந்ததாக, பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்தது.
எனினும், அதை காங்கிரஸ் கட்சியினர் ஏற்காமல், தங்களை அவமதித்து விட்டதாக புகார் கூறினர். அதையே காரணமாக வைத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் விழாவுக்கு வருவதில்லை என்கின்றனர் அரசியல் கட்சியினர்.