சிவகிரி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்”-ஆட்சியர் ஆய்வு
1 min read
Collector inspects the “Seeking You in Your Village” scheme in Sivagiri Taluk.
19/8/2026
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” என்ற திட்டத்தில் சிவகிரி வட்டத்தில்
மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” என்ற திட்டத்தில் சிவகிரி வட்டத்தில் இந்த நிதியாண்டில், இரண்டாம் கட்டமாக மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், இன்று 19.8:26 முற்பகல் 9.00 மணி முதல் அரசால் நிறைவேற்றப்பட்டு வரும். அனைத்து துறை சார்ந்த முக்கியமான திட்டங்கள், அரசு அலுவலகங்களின் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அதன்படி, சுப்பிரமணியபுரம் ஊராட்சியில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாப்பாங்குளம், வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தயார் செய்யப்படும் சமையலறை மற்றும் வைப்பறையினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து வாசுதேவநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தினை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் வாசுதேவநல்லூர் பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் இருசக்கர வாகன காப்பகத்தினையும், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நாரணபுரம் ஊரணி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், நாரணபுரம் ஊராட்சி கிராம செயலகத்தினையும் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக் கூடத்தின் கட்டுமானப் பணிகளையும் அங்கன்வாடி மையத்தினையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் மேட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இருப்பு வளாகத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள உரங்களையும் நியாய விலைக் கடையினையும் அங்கு பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் இருப்பு குறித்தும், சிறப்பு கடன் மேளா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் பார்வையிட்டு ரூபாய் 20:15 இலட்சம் மதிப்பிலான கடன்களுக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர், இராமநாதபுரம் பனைவெல்ல உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தினையும்,சிவகிரி பேரூராட்சியில் குடிநீர் மேம்பாட்டு பணிக்காக ரூபாய் 189.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குடிநீர் கிணற்றினையும் பார்வையிட்டார்.
அதன் தொடர்ச்சியாக சிவகிரி பேரூராட்சியில் உள்ள தேவர் மகா சபை திருமண மண்டபத்தில் வைத்து பொதுமக்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து 164 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களது குறைகளைக் கேட்டறிந்து அதனை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் சிவகிரி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு தெரு நாடகம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர்
மா.வீராசாமி, திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆ.ரா.சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் சங்கரன்கோவில் அனிதா, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் டாக்டர் இரா.தண்டபாணி, மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வேங்கடலட்சுமி, இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் நரசிம்மன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம்ராஜேந்திரன்
அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.