August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

1 min read

Road workers’ protest in Tenkasi

19/8/2026
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கம் சார்பாக கோட்ட பொறியாளர் மூலமாக கோரிக்கை அனுப்பும் போராட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் தென்காசி
கோட்ட தலைவர் பாப்புராஜ் தலைமை தாங்கினார். கோட்ட இணை செயலாளர் தோழர் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.கோட்ட செயலாளர் சு.வேல்ராஜன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் த.சேகர் வாழ்த்துரை வழங்கினார் நிறைவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மேனாள் மாவட்ட செயலாளர் க.துரைசிங் நிறைவுரையாற்றினார்

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலைப் பணியாளர்களின்
41 மாத பணி நீக்ககாலத்தை சென்னை உயர் நீதிமன்ற வழக்கு எண் wp No 24797 / 2015ல் தீர்ப்பு நாள் 23.10-2024 மேல் முறையீட்டு மனுவை திரும்ப பெற்று
வரன்முறைபடுத்தி ஆணை வழங்க வேண்டும்
சாலைப் பணியாளர்களில் பணியின் போது உயிர் நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படை பணியிடம் விரைந்து வழங்க வேண்டும்

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து விட்டு கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப் பணியாளராக பணி நியமனம் செய்ய வேண்டும்.
சாலைப் பணியாளருக்கு தொழில் நூட்ப கல்வித் திறன் பெறாத ஊதியத்துக்குரிய ஊதிய மாற்றம் ரூ 5200-ரூ 20200 தர ஊதியம் ௹ 1900 வழங்க வேண்டும். உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் தென்காசி மாவட்ட பொருளாளர் காசிராஜ் நன்றியுரை ஆற்றினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *