August 19, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே 1 லட்சம் லஞ்சம் வாங்கிய வனச்சரக அலுவலர் கைது

1 min read

Forest Range Officer arrested near Tenkasi for accepting a bribe of Rs1 lakh.

19/8/2026
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் வனத்துறை சார்பில் ஒப்பந்த பணிகளை செய்து வரும் அரசு ஒப்பந்தக்காரர் சுரேஷ்குமார் என்பவரிடம் ரூபாய் 1 லட்சம் லஞ்சம் வாங்கிய வனச்சரக அலுவலர் கதிரவன் என்பவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் சுரேஷ்குமார் (வயது45) இவர் தனது பெயரில் அரசு ஒப்பந்த வேலைகள் எடுத்து செய்து வருகிறார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை அழிக்காமலும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காமலும் இருப்பதற்காக வனப்பகுதியை ஒட்டி 8 கி.மீட்டர் துரத்திற்கு யானை தடுப்பு அகழி அமைப்பதற்கு டெண்டர் மூலம் பணி ஆணையை 07.02.2026 ஆம் தேதியில் பெற்று அப்பணியை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிவகிரி வனச்சரக அலுவலர் கதிரவன் என்பவர் தனக்கு பில் தொகையில 30% கமிஷன் தரவேண்டும் என்று புகார்தாரரான சுரேஷ்குமாரிடம் தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார்,

இந்நிலையில் நேற்று (18.08.2026) புகார்தாரரான சுரேஷ்குமார் சிவகிரி சென்று கதிரவனை நேரில் சந்தித்து குறைந்த விலைப்புள்ளியில் டெண்டர் எடுத்துள்ளேன். பார்த்து சொல்லுங்க சார் என கேட்டதற்கு 20% வது தரவேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன் இனிமேல் பில் போடவும் மாட்டேன்

ஏற்கனவே ரூ.18,45,000/-ற்கான பில் தொகையை பெற்றுள்ளீர்கள். அதற்கான 20% கமிஷன் தொகை ரூ.3,69,000/-ஐ தந்துவிட்டு மீதி வேலையை முடியுங்கள் என கூறியுள்ளார்.

அதற்கு புகார்தாரரான சுரேஷ்குமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியவுடன் சரி முதல் தவணையாக ரூ.1,00,000/- ஒரு லட்சம் நாளைக்கு 19.06.2026 ஆம் தேதி தரவேண்டும்
மீதி பணத்தை இறுதி பில் போடும்போது தரவேண்டும் என கறாராக சொல்லி விட்டதால், பணம் கொடுக்க விருப்பம் இல்லாத புகார்தாரர் சுரேஷ்குமார் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகாரின்பேரில் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் சிவகிரி வனச்சரக அலுவலர் கதிரவன் என்பவர் மீது 18.08.2026-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்,

அதனைத் தொடர்ந்து புகார்தாரர் சுரேஷ்குமாரிடம் ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூ.1,00,000/-த்தை கொடுத்தனுப்ப அதை நேற்று 19.08.2026-ம் தேதி கதிரவன் தன்னுடைய வீட்டில் வைத்து
பெற்றுக்கொண்டபோது, அப்பகுதியில் மாறுவேடத்தில் மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வனச்சரக அலுவலர் கதிரவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *