பாவூர்சத்திரம் குருசாமிபுரம் கற்குவேல் அய்யனார் கோவில் திருவிழா
1 min read
Pavoorchatram Gurusamipuram Karkuvel Ayyanar Temple Festival
19/8/2026
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகற்குவேல் அய்யனார் கோவில் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது.
முதல்நாள் காலை கணபதி ஹோமமும், மாலையில் 108 திருவிளக்கு பூஜையும், இரவு வில்லிசை, நள்ளிரவு சாம பூஜையும் நடைபெற்றது.
2ம் காலையில் குற்றாலம் புனித நீர் பவனி மற்றும் பால்குடம் எடுத்து சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. மதியம் கற்குவேல் அய்யனாருக்கு சிறப்பு அலங்காரம், உச்சிகால பூஜை, அன்னதானமும் நடைபெற்றது. இரவு சிறப்பு பட்டிமன்றமும், நள்ளிரவு சாமபூஜையும் நடைபெற்றது.
3ம் நாள் காலையில் பொங்கலிடுதல், கிடா வெட்டுதல், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை குருசாமிபுரம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனா