தென்காசி ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் திறப்பு விழா
1 min read
Inauguration of digital lockers at Tenkasi railway station.
19/6/2026
தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் டிஜிட்டல் முறையில் தாங்களே இயக்கும் வகையிலான லக்கேஜ் லாக்கர் (பொருட்கள் வைப்பறை) இன்று தொடங்கி வைக்கப்பட்டது. புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த வசதி, எளிதாகப் பயன்படுத்தக் கூடியதாகவும், அதிக பாதுகாப்பு கொண்டதாகவும், நவீன கால ரயில் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரமேஷ் தலைமை வணிக ஆய்வாளர் ரமேஷ், நிலைய மேலாளர் கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்
மிகப்பெரிய அளவில், பயணிகளுக்கு ஏற்ற மலிவு விலையில் கிடைக்கின்றன:
நடுத்தர லாக்கர்: 6 மணி நேரத்திற்கு ₹40
பெரிய லாக்கர்: 6 மணி நேரத்திற்கு ₹60
மிகப்பெரிய லாக்கர்: 6 மணி நேரத்திற்கு ₹120 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை ‘ஃபோன்செல்’ நிறுவனத்தின் விற்பனை மேலாளர் சண்முக சுந்தரம், ‘டுரோல்ட் ஸ்மார்ட் லாக்கர் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஃபோன்செல் நிறுவனம், தனது 51-வது டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதியை தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெற்றிகரமாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதாக அறிவித்தார். 100% ‘மேக் இன் இந்தியா’ கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, 24 மணி நேரமும் தானியங்கி சேவையை வழங்குகிறது. என அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்ற டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதிகள் தமிழ்நாட்டில் ஏற்கனவே 9 இடங்களில் செயல்பாட்டில் உள்ளன. இந்நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.