நடிகை சவுகார்ஜானகி கவலைக்கிடம்
1 min read
Actress Sowcar Janaki in critical condition
20.8.2026
400 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் தமிழ் நடிகை சவுகார் ஜானகி (வயது94) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்து வமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனும திக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ள அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்ஸதிரையுலகின் பழம் பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை
யில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
சவுகார் ஜானகி (வயது 94.) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவருக்கு இன்று இரவு திடீர் மூச்சு திணறல் காரணமாக ஆழ்வார்பேட் டையில் உள்ள
தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட் டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சைஅளிக்கப்பட்டுவரு கிறது அவரது உடல் நிலையை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
தமிழ்த்திரையுலகில் கடந்த 1931 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் கோதாவரி மாவட்டத்தில் பிறந்த சவுகார் ஜானகி, 1950களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக் கெனதனி இடத்தைப
பிடித்தவர். சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர்.ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர் களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கலைத்துறைகாக இவர் இரண்டு நந்தி விருதுகள், கலைமாமணி விருது, 2022ம் ஆண்டு இந் தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீவிருதும் பெற்றுள்ளார்.
இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரின் பேத்தியான வைஷ்ணவி அரவிந்தும் ஒரு நடிகையாவார்; இவர் 1987 முதல் பல தமிழ், தெலுங்கி லும், சில மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.