August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் குரங்கு கடித்து சிறுவன்- மருத்துவ வசதி இல்லாததால் அவதி

1 min read

Boy bitten by a monkey in Courtallam suffers due to lack of medical facilities

20.8.2026
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்பொழுது சீசன் காலம் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றால அருவி நீராடுவதற்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று குற்றாலம் மெயின் அருவியில் குளித்துவிட்டு குலசேகரப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது மகனுடன் வந்த பொழுது குரங்கு ஒன்று அவரது மகனை கடித்தது.

உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் குற்றாலம் அரசு மருத்துவமனைக்கு காலை 10:30 மணி அளவில் சென்ற பொழுது அங்கு மருத்துவமனை பூட்டிஇருந்தது
உடனடியாக காயம் பட்ட சிறுவனை அழைத்துக் கொண்டு மேலகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற அங்கு சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் தினமும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற குற்றாலத்தில் அரசு மருத்துவமனை செயல்படாமல் பூட்டி கிடப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தென்காசி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு ஈசன் காலங்களில் குற்றாலத்தில் 24 மணி நேரமும் மருத்துவமனை திறந்து இருப்பதோடு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *