கடையம் திருவள்ளுவர் கழக மாதந்திர சிறப்புக் கூட்டம்
1 min read
Kadayam Thiruvalluvar Kazhagam Monthly Special Meeting
21.8.2026
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் திங்கள் சிறப்புக் கூட்டம் இன்று (21.8.2026) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் கடையம் வடக்குத் தேர்த் தெருவில் உள்ள கே.எஸ்.எஸ்.எஸ். சிற்றரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக கடையம் சேவாலயா – செல்லம்மா பாரதி கற்றல் மைய மாணவிகளின் கடவுள் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, கோபால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். த. அந்தோணி ராஜ் குறள் சிந்தனை உரையாற்றினார்.
இக்கூட்டத்திற்கு திருவள்ளுவர் கழகத்தலைவர் தமிழ்த் தென்றல்ஆ. சேதுராமலிங்கம் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்க்கடல் அபுதாபி கு. பாஸ்கர், “வள்ளுவம் வழி கவிதை பொழி கம்பனும், கண்ணதாசனும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக, மு. வேலு நன்றி உரையாற்றினார்.
நிகழ்ச்சியை திருவள்ளுவர் கழக செயலாளர் கல்யாணி சிவகாமி நாதன் ஒருங்கிணைத்து நடத்தியதோடு விளக்கம் அளித்து பேசினார்.
கடையம் திருவள்ளுவர் கழக இணைச் செயலாளர் பெ. சின்னச்சாமி விருந்து போற்றல் நிகழ்வைச் சிறப்பாக நடத்தினார்.
இவ்விழாவில் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.