August 25, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆழ்வார்குறிச்சி குளங்களில் குப்பைகள் அகற்றம்

1 min read

Garbage removed from ponds in Alwarkurichi.

24/8/2026
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியில் முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை தலைமையிலான வி த லீடர்ஸ் அமைப்பின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவரும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான அண்ணாமலையின் தலைமையில் இயங்கி வரும் வி த லீடர்ஸ் அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சமூகநலப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலையின் அறிவுறுத்தலின் பேரில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் உள்ள தொண்டைமான்குளம் மற்றும் வலத்தாகுளம் ஆகிய குளங்களில் வளர்ந்துள்ள முட்கள், ஆகாயத் தாமரை உள்ளிட்ட செடி கொடிகள், நெகிழிப் பொருட்கள் போன்ற குப்பைகள் அகற்றப்பட்டு குளங்கள் சுத்தம் செய்யப்பட்டது.

முத்தையா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கந்தசாமி, ஸ்டாலின், வெங்கடேஷ், ரவிக்குமார், பார்த்தசாரதி செந்தில், சீனிவாசன், முருகன் என்ற இப்ராஹிம், செல்வகுமார், மகளிரணி சித்ரா, சுந்தர்ராஜன், சுகன், சாய்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கடும் வெயிலிலும் கலை முதல் மாலைவரை குளங்களை சுத்தம் செய்தனர்.

குளங்களை சுத்தப்படுத்தும் பணி இம்மாதம் முழுவதும் விடுமுறை நாட்களில் நடைபெறும் என்றும் ஆர்வமுள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *