கடையம் அதிமுக யூனியன் கவுன்சிலர் தவெகவில் இணைந்தார்
1 min read
Kadayam AIADMK Union Councillor joins TVK.
24/8/2026
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம் 12 வது வார்டு கவுன்சிலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
கடையம் ஊராட்சி ஒன்றியக் குழு 12வது வார்டு உறுப்பினரும் அதிமுக நிர்வாகியுமான மணிகண்டன் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலாளர் விபின் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் லெச்சிய காந்தன் முன்னிலை வகித்தார்.
இணைப்பின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி தெற்கு மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சுனில் மேண்ட்லி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மனோஜ் பினு, ஒன்றியக் குழு உறுப்பினர் ஜனதா காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.